சென்னை:சென்னையில்மழைநீர் வடிகால்வாய் பணி பருவமழைக்கு முன்பாக நிறைவு பெற வேண்டும் என தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மழைநீர் வடிகால்வாய் பணி நடைப்பெறும் இடங்களில் ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வடசென்னை திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் பகுதிக்கு உட்பட்ட 1வது தெருவில் வசித்து வருபவர் பூங்காவனம் என்பவர் வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி 6வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களோடு வீட்டை அகற்ற வந்தனர். மேலும் அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த சூழலில் பூங்காவனத்தின் உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர். இதற்கிடையே அதிகாரிகள் வீட்டை அகற்ற முற்பட்டனர். அப்போது அந்த வீட்டை சார்ந்தவர்கள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.