தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாத்மா காந்திக்கு காந்தி மண்டபத்தில் ஏன் மரியாதை செலுத்தவில்லை? முதலமைச்சருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி - GOVERNOR QUESTIONS THE CM

மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் ஏன் மரியாதை செலுத்தவில்லை? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை
ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை (Image credits-@rajbhavan_tn)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 2:35 PM IST

சென்னை:மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் ஏன் மரியாதை செலுத்தவில்லை? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பி உள்ளார்.

மகாத்மா காந்தி நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து அரசியல்வாதிகள் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் மகாத்மா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அருங்காட்சியகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையின் அருகே வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்னொருபுறம் ஆளுநர் ஆர்.என்.ரவி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் காந்தியின் புகைப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க:மகாத்மா காந்தி நினைவு தினம்...பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி!

இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜரால் பிரம்மாண்டமான நினைவுச் சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் மாநில அரசின் சார்பில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா? தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை கோரிக்கைகள் விடுத்தேன்.

ஆனால், எனது கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?,"என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details