கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் எந்தெந்த ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம் என்பது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாக வெளியிட்ட அறிக்கையில், "18வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொருத்தவரை கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட மொத்தம் 3 ஆயிரத்து 96 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்கு செலுத்த ஏதுவாக போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர 12 வகையான ஆவணங்களை அடையாள சான்றாகப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் அவை,
- ஆதார் அட்டை
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
- கணக்குப் புத்தகங்கள் (வங்கி அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)
- மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)
- ஓட்டுநர் உரிமம் (பணியாளர் அடையாள அட்டை)
- வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
- ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்தியத் தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது)
- இந்தியக் கடவுச்சீட்டு
- ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது)
- மத்திய / மாநில அரசுகள் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் பொதுத் துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை.
- அலுவலக அடையாள அட்டை (நாடாளுமன்ற / சட்டமன்றப் பேரவை / சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது).
- இயலாமைக்கான தனித்துவமான அட்டை (இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது).