அகமாதாபாத்:குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற குவாலிஃபயர் (Qualifier 1) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு:இந்த போட்டியில் டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இரவு நேரந்தில் பந்து வீசுவது கடினமாக இருக்கும் எனும் நிலையில் ஒவ்வொரு அணியும் டாஸ் வென்று பந்து வீசவே விரும்பின ஆனால் அதற்கு நேர்மாறாக பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதுதான் தோல்விக்கான முதல் காரணமாக பார்க்கப்படுகிறது.
4 டக் அவுட்: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெறுமையை பெற்றுள்ள ஹைதராபாத் அணி இந்த போட்டிங்கில் பேட்டிங்கில் சொதப்பியது. முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்துவிடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய அந்த அணி பவர்பிளே முடிவதற்குள் 4 விக்கெட்டிகளை இழந்தது.
அதே போல் டிராவிஸ் ஹெட், சபாஷ் அகமது, இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய சன்வீர் சிங், இறுதியில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் ஆகிய 4 பேட்ஸ்மேன்களும் டக் அவுட் ஆகி வெளியேறினர். இதனால் அந்த அணியால் எதிர்பார்த்த ரன்களை குவிக்க முடியவில்லை.
2 கேட் மிஸ்:இந்த போட்டியில் சிறப்பக விளையாடி கொண்டு இருந்த ஸ்ரேயாஸ் ஐயரின், 2 கேட்களை ஹைதராபாத் வீரர்கள் கோட்டை விட்டனர். அதே போல் நேற்றை போட்டியில் அந்த அணியின் பீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.