சென்னை:நூற்றாண்டு மின்சார ரயில் சேவையை பாராட்டி மதுரையில் நடைபயணம் நடைபெற்றது.
இந்தியாவில் முதன்முதலாக மின்சார ரயில் சேவை மும்பை விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ரயில் நிலையம் இடையே 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. மின்சார ரயில் மூலம் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள 66,504 கி.மீ. தூர ரயில் பாதைகளில் 97.05 சதவீதமான 64,545 கி.மீ தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள 5,040 கி.மீ. தூர ரயில் பாதைகளில் 95.21 சதவீதமான 4,799 கி.மீ தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்தில் உள்ள 1,322 கி.மீ. தூர ரயில் பாதைகளில் 94.77 சதவீதமான 1,252 கி.மீ தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதையில் தற்போது மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நூற்றாண்டு மின்சார ரயில் சேவையை பாராட்டி மதுரையில் நடைபயணம் (ETV Bharat Tamilnadu) இந்திய ரயில்வேயில் மின்சார ரயில் சேவை 100 ஆண்டுகள் கடந்ததை நினைவு கூறும் வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக வியாழக்கிழமை அன்று மதுரையில் மின்சார ரயில் நூற்றாண்டு சேவையை பாராட்டி நினைவு கூறும் வகையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நூற்றாண்டு மின்சார ரயில் சேவையை பாராட்டி மதுரையில் நடைபயணம் (ETV Bharat Tamilnadu) இந்த நடைப்பயணத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கொடியசைத்து வைத்தார். இந்த நடைபயணம் கோட்ட அலுவலகத்தில் இருந்து தேனி மெயின் ரோடு, ரயில் நிலைய மேற்கு நுழைவாயில், ரயில்வே காலனி பகுதிகள் வழியாக சென்று தொழிலாளர் ஒய்வு அறை அருகே நிறைவு பெற்றது. நடைபயணத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், முதன்மை வேகசக்தி திட்ட மேலாளர் எம்.ஹரிகுமார், கோட்ட மின் பாதை பொறியாளர் எம். எஸ். ரோஹன், கோட்ட மின்சார ரயில் பொறியாளர் அமல் செபாஸ்டியன் உட்பட ரயில்வே அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், ஓடும் தொழிலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.