தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 2வது முறையாக வாக்களிக்க முயன்ற நபர்.. சிக்கியது எப்படி? - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Voter Arrest in Coimbatore: கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் 52 வயது நபர் ஒருவர் இரண்டாவது முறையாக வாக்களிக்க முயன்று கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Voter Arrest in Coimbatore
Voter Arrest in Coimbatore

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 1:00 PM IST

கோவையில் 2வது முறையாக வாக்களிக்க முயன்ற நபர் கைது

கோயம்புத்தூர்: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நேற்று முதற்கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட 40 தொகுதிகளிலும் தேர்தல் நிறைவடைந்தது. இந்த நிலையில், கோவையில் 2வது முறையாக ஓட்டு செலுத்த வந்த ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை நல்லாம்பாளையம் தண்டல் முத்தாரம்மன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு(52). இவர் நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள பூத் எண் 145ல் வாக்களிக்கச் சென்றுள்ளார்.

அப்போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலைக் காண்பித்துள்ளார். அங்கிருந்து அதிகாரிகள் இடது கை விரலைக் காட்டுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகளை அவரது இடது கை விரலைப் பார்க்கும் பொழுது அவர் ஏற்கனவே ஓர் இடத்தில் வாக்களித்துவிட்டு இரண்டாவது முறையாக இங்கு வாக்களிக்க வந்தது தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் திருநாவுக்கரசைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஓட்டு இருந்ததாகவும், காந்திபுரம் பகுதியில் வாக்களித்துவிட்டு நல்லாம்பாளையம் வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தற்போது திருநாவுக்கரசின் மீது 171(D) போலியான பெயரில் வாக்களித்தல் மற்றும் 171 F(2) தகாத வாக்கு செலுத்துதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சம்பவத்தின் போது அப்பகுதியிலிருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நீயா? நானா? வாக்குச்சாவடியில் பூத் ஏஜென்டாக இருப்பதில் பாஜக கோஷ்டி மோதல் - 3 பேர் கைது - ஆம்பூரில் நடந்தது என்ன? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details