கோயம்புத்தூர்:செப்.28 ஆம் தேதி கோவையில் விஸ்வகர்கமா சமூக மக்கள் மத்தியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், குலத்தொழிலை அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லும் திமுகவை ஏன் நீங்கள் எதிர்க்கவில்லை என்றும், மத்திய அரசின் விஸ்வகர்ம திட்டத்தினை தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதை ஏன் கேள்வி கேட்கவில்லை? என விஸ்வகர்மா சமூக மக்களிடையே பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஆவேசமாகப் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வந்தது.
அறிக்கை வெளியிட்ட வானதி சீனிவாசன்: இந்நிலையில் இந்த வீடியோ காட்சிக்கு பதிலளிக்கும் வகையில், வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "விவசாயத்தைக் குலத்தொழிலாக கொண்டு வழக்கறிஞர் துறையை எனது தொழிலாக தேர்ந்தெடுத்த நான், குலத்தொழில் முறையை ஆதரித்து பேசியது போன்ற ஒரு மாயையை உருவாக்க முயல்கின்றனர் இது சற்றும் ஏற்புடையதல்ல" என்றார்.
வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பும் விஸ்வகர்மா சமுதாய அமைப்பினர் (Credits- ETV Bharat Tamil Nadu) மீண்டும் எழுந்த சர்ச்சை:இந்நிலையில் இன்று கோவையில் நடந்த கைவினைக் கலைஞர்களுடனான சந்திப்பில் வானதி சீனிவாசன் பேசும் போது, "நமது மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 'விஸ்வகர்மா' என்ற திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டை ஊக்குவிப்பதைப் பற்றியும் சிந்தித்து பல கோடி ரூபாய் நிதி ஒதிக்கி வருகின்றனர். ஆனால் திமுக தனது அரசியல் ஆதாயங்களுக்காக அத்திட்டத்தின் பலன்கள் தமிழக கைவினைஞர்களுக்கு கிடைக்க விடாமல் தடுக்கிறார்கள்" என்றார்.
இதையும் படிங்க:"குலத்தொழிலை அனுமதிக்காத திமுகவை ஏன் எதிர்க்கவில்லை?" - வானதி சீனிவாசன் கேள்வி!
விஸ்வகர்மா சமூதாய பிரதிநிதி சரமாரி கேள்வி:இந்நிலையில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்பு பா.ஜ.க தேசிய மகளிர் வானதி சீனிவாசனிடம், விஸ்வகர்மா சமுதாய அமைப்பின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பும் மற்றொரு வீடியோ காட்சியும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் விஸ்வகர்மா குலத்தொழில் அல்ல என நிதியமைச்சர் சொல்வது வேதனை அளிப்பதாக இருக்கிறது என அந்த அமைப்பின் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு பதில் அளிக்கும் வானதி சீனிவாசன் விஸ்வகர்மா திட்டத்தை குலத்தொழில் என எதிர்க்கும் மாநில அரசை எதிர்த்து ஏன் நீங்கள் குரல் எழுப்புவில்லை என கேட்டுள்ளார்.
குலத்தொழில் எங்களது பாரம்பரிய பெருமை: மேலும் பேசிய வானதி சீனிவாசன், "குலத்தொழில் எங்களது பாரப்பரிய பெருமை, அதற்கு மத்திய அரசு உதவினால் அதை ஏன் எங்களுக்கு கொடுக்கவில்லை என மாநில அரசிடம் நீங்கள் கேட்கவேண்டும். மத்திய நிதியமைச்சர் பேசியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். திட்டத்தின் பெயர்தான் விஸ்வகர்மாவே தவிர, இதில் முடி திருத்துபவர், தையல்காரர் என அனைவரும் பலன் அடையலாம். விஸ்வகர்மா சமூகத்தில் யாரையும் சேர்க்க வேண்டுமோ அல்லது மாற்ற வேண்டுமோ என்ற எண்ணம் பிரதமருக்கு இல்லை.
விஸ்வகர்மா திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன். இது தொடர்பாக கையெழுத்து இயக்கம், உண்ணாவிரதம் என அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம்” என்று விஸ்வகர்மா சமூக மக்களிடம் தெரிவிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகி இருந்த நிலையில் தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்