தமிழ்நாடு

tamil nadu

மக்களவைத் தேர்தல் 2024: விருதுநகர் தொகுதியில் 2வது முறையாக மாணிக்கம் தாகூர் வெற்றி! - LOK SABHA ELECTION RESULTS 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 7:19 PM IST

Updated : Jun 4, 2024, 4:07 PM IST

Virudhunagar Lok Sabha Election Results 2024: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அபார வெற்றி பெற்றுள்ளார். மேலும், விருதுநகரில் பதிவான வாக்குகளின் முழு விபரத்தை காணலாம்..

தேர்தல் ஆணையத்தால் சான்றிதழ் வங்கும்போது எடுத்த புகைப்படம்
தேர்தல் ஆணையத்தால் சான்றிதழ் வங்கும்போது எடுத்த புகைப்படம் (credits - manickam tagore X Page)

விருதுநகர்:விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வ.எண்கட்சி பெயர்பெற்ற வாக்குகள்
1.திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் (வெற்றி)3,85,256
2. அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,80,877
3. பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 1,66,271
4. நாதக வேட்பாளர் கௌசிக் 77,031
5. நோட்டாவில் பதிவான வாக்குகள் 9,408

தேர்தலில் போட்டியிட்ட முதல் தடவையிலேயே, விருதுநகரில் தொடர்ந்து இரண்டு முறை எம்பியாக இருந்த காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு, தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பயங்கரமாக டப் அளித்து வந்த நிலையில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 2,62,201 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2,66,363 வாக்குகளும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் 1,14,669 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக் 52,572 வாக்குகளும் பெற்றனர். விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4,162 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 04.06 PM நிலவரம்.

  • விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 203002 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 208839 வாக்குகளும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் 83845 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக் 40765 வாக்குகளும் பெற்றனர். விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 5837 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார் - 02.26 PM நிலவரம்.
  • விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 147271 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 147239 வாக்குகளும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் 56948 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கெளசிக் 29234 வாக்குகளும் பெற்றனர். விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட 32 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். - 01.14 PM நிலவரம்.
  • விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் காங்கரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை விட 2149 வாக்குகள் முன்னிலை வகித்தார் - 11.11 AM மணி நிலவரப்படி.
  • விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தார் - 10.00 AM மணி நிலவரப்படி.
  • விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியிலுள்ள தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்தார் - 9.00 AM மணி நிலவரப்படி.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டுள்ளதால் விருதுநகர் மக்களவைத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்று அனைவரும் உற்று நோக்கும் தொகுதியாக மாறியிருக்கிறது. திமுக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கெளசிக் போட்டியிட்டுள்ளார்.

ராதிகா மற்றும் விஜயபிரபாகரன் கடந்த தேர்தல்களில் நட்சத்திர பேச்சாளர்களாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் இந்த தேர்தலில் இருவருமே ஒரே தொகுதியில் களமிறங்கியுள்ளனர். இம்முறை, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2019ல் தேர்தல் களம் எப்படி?: விருதுநகர் தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4,70, 883 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 3,16,329 வாக்குகளை பெற்றார். சுயேச்சையாக களமிறங்கிய எஸ்.பரமசிவ ஐயப்பன் 1,07,615 வக்குகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: விருதுநகரில் மும்முனை போட்டி காணும் நட்சத்திர வேட்பாளர்கள்! - ஜொலிக்கப் போவது யார்? - LOK SABHA ELECTION 2024

Last Updated : Jun 4, 2024, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details