சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தம்மம்பட்டி அடுத்த மண்மலை ஊராட்சியில் இருக்கிறது மொடக்குப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை ஒன்று அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலையால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் நஞ்சாகுவதாகவும், சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதாகவும் கூறி பூச்சிக்கொல்லி மருந்து ஆலையை அகற்ற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 10 கிராம சபை கூட்டத்திலும், பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றினர். ஆனால், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் மொடக்குப்பட்டி கிராம மக்கள் தங்களது கிராமத்தில், தம்மம்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:இரத்த சோகையில் இருந்து மீண்ட கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு மருத்துவமனை!