தஞ்சாவூர்: திருவோணம் தாலுகா இடையாத்தி வடக்கு கிராமத்தில் பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெயரில் புல எண் 67/9 ல் அரசு அங்கன்வாடி கட்டடம் சுமார் 44 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை அதே ஊரை சேர்ந்த தனிநபரின் பெயருக்கு கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் மற்றும் கிராம உதவியாளர் அன்பழகன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து முறைகேடாக சிட்டா, அடங்கல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் தனது மகனுக்கு தான செட்டில்மெண்ட் ஆவணம் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேராவூரணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் கிராம மக்கள் சார்பில் முறைகேடாக அரசு கட்டடத்தை பட்டா மாற்றம் செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் அண்மையில் புகார் அளிக்கப்பட்டது.