விஜயகாந்த் 100வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சிறப்புப் பூஜை! சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல், கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் பொதுமக்கள், கட்சியினர், முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள் என அவரது நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று விஜயகாந்த்தின் 100வது நாள் நினைவு தினம் மற்றும் விஜயகாந்த்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் சண்முக பாண்டியன் ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர்.
100வது நினைவு நாள் சிறப்புப் பூஜையில் தேமுதிக கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டர். இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும், அவரது மகன் நடிகர் சண்முக பாண்டியன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பின்னர் சண்முக பாண்டியன் நடித்து வெளிவர இருக்கும் படைத்தலைவன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகர் சண்முக பாண்டியன், "படைத்தலைவன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பொதுமக்கள் திரையரங்கில் படத்தைப் பார்க்க வேண்டும்.
மேலும் தன்னுடைய பிறந்தநாளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் பேசிய விஜய பிரபாகரன் அப்பாவின் இரண்டு பொறுப்புகளில் ஒரு பொறுப்பான சினிமாவை நான் எடுத்துக் கொண்டேன் எனவும், அரசியலை அண்ணன் விஜய பிரபாகரன் எடுத்துக் கொண்டார்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"பரந்தூர் புதிய விமான நிலையத்தை அமைக்க விடமாட்டோம்" - ஸ்ரீபெரும்புதூர் நாதக வேட்பாளர் சிறப்புப் பேட்டி! - Lok Sabha Election 2024