சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 'தளபதி விஜய் கல்வி விருது விழா' என்ற பெயரில் நேரில் அழைத்து பாராட்டி, அவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்குகிறார். இந்த நிகழ்வு சென்னையில் தொடங்கியது.
இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "நடந்து முடிந்த பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த என்னுடைய தம்பி தங்கைகளுக்கும், அவர்களுடன் பெருமையுடன் வந்துள்ள பெற்றோர்களுக்கும், விழாவை ஏற்பாடு செய்த த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்திற்கும், த.வெ.க தோழர்களுக்கும் என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பானவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.