கள்ளக்குறிச்சி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. இந்தநிலையில் "இல்லங்களில் விநாயகர்.. திரையரங்குகளில் கோட்" என்பதைக் குறிக்கும் விதமாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம் விநாயகர் சிலையை வைத்து நடிகர் விஜயின் உருவப்படத்தைப் படத்தை வரைந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம், இவர் சிவனார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தன்னுடைய அசாத்திய ஓவிய திறன் மூலம் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாள் போன்றவற்றில் கிளாஸில் ஓவியம் வரைவது, பதாகைகள் வைத்து ஓவியம் வரைவது, கைகை கட்டிக் கொண்டு தலையில் பிரஷை வைத்துக் கொண்டு ஓவியம் வரைவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் வரைந்து அசத்தி வருகிறார்.
தி கோட்:இந்தநிலையில் வெட்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் , 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (The Greatest of All Time). இதில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சிநேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை இத்திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.