தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்சஒழிப்புத் துறை போலீசார் சோதனை: பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு?

கணபதி தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனையில், ரூ.1,41,500 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முத்துச்செல்வன், பணம் தொடர்பான கோப்புப்படம்
முத்துச்செல்வன், பணம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 4:53 PM IST

கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ளது கணபதி தீயணைப்பு நிலையம். இங்கு முத்துச்செல்வன் என்பவர் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பட்டாசு கடை உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்களிடம் லஞ்சமாக பணத்தை மிரட்டி வாங்கி வருவதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு பல புகார்கள் சென்றதாக தெரிகிறது.

இதனையடுத்து கடந்த நவ 24ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி திவ்யா தலைமையிலான போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் பணியில் இருந்த முத்துச்செல்வனிடம் ரூ.1,41,500 பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், பணத்திற்கான போதிய ஆவணங்களை காட்டும்படி முத்துச்செல்வனிடம் கேட்டதற்கு, அவர் போதிய ஆவணங்கள் இல்லாத நிலையில், முன்னுக்கு பின் முரணாண தகவல்களை தெரிவித்துள்ளார். இந்நிலையில் கணக்கில் வராத பணம் ரூ.1,41,500 பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்ட ஆலோசனைக்கு பின்பு கணபதி தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசெல்வன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தீயணைப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க :ராமதாஸ் குறித்து கருத்து.. முதல்வரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் குதித்த பாமகவினர்..!

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், "முத்துச்செல்வன் மீது தொடர்ந்து புகார்கள் வந்தது. கணபதி பகுதியைச் சார்ந்தவர்கள் பல்வேறு தொழில்களுக்காகவும், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும் தடையிண்மை சான்று கேட்டு விண்ணம் செய்தால் அவர்களின் விண்ணத்தை ஏற்று சான்றுதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.

இதனைத் தொடர்ந்து அவரைக் கண்காணித்து வந்தோம். தீபாவளி சமயத்தில் இவர் மீது அதிகப்படியான புகார்கள் வந்தது. இதனை கருத்தில் கொண்டு திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கணக்கில் வராத ரூ.1,41,500 பணம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த பணம் யார் கொடுத்தார்கள்? எந்த பணிக்காக பெறப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால், அவர் உண்மையை கூற மறுத்து வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தீயானைப்பு துறை உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details