மதுரை: மதுரை மாவட்டம், ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்தவர், நடிகர் பரோட்டா சூரி. இவர், தமிழ்த் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகராவார். சினிமா மூலம் தனக்கு கிடைத்த வருமானத்தைக் கொண்டு தன்னுடைய சகோதரர்கள் பெயரில் மதுரை தெப்பக்குளம், அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒத்தக்கடை, செல்லூர், கரிமேடு, ஊமச்சிகுளம், கடச்சனேந்தல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவகம் மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தோடு குறைந்த விலையில், தரமான உணவுகள் வழங்க வேண்டும் என்று குறிக்கோளுடன் தொடங்கப்பட்டது. இந்த உணவகத்தை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு மிக குறைவாக இருப்பதாகவும்; மேலும், விலை அதிகமாக இருப்பதாகவும் வாடிக்கையாளர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.