தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்; மார்ச் 18-இல் அதிமுக கொடி சின்னம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு! - case on ops for using ADMK symbol

EPS Vs OPS: அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மார்ச் 18ஆம் தேதி வழங்க உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மார்.18 தீர்ப்பு
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னத்தை ஒ.பி.எஸ் பயன்படுத்தலாமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 10:27 PM IST

சென்னை:அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில், கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஓபிஎஸ் தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் எனவும் ஓபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களை கேட்டறிந்தார்.

இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற திங்கள்கிழமை (மார்ச் 18) பிற்பகல் 2.15 மணிக்கு நீதிபதி சதீஷ்குமார் பிறப்பிக்க உள்ளார்.

இதையும் படிங்க: "ஆளுநரின் கருத்துகளை தவறுதலாக புரிந்து கொண்டேன்" - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர்!

ABOUT THE AUTHOR

...view details