தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மக்களுக்கு இலவசங்களை வழங்குவதைவிட திட்டங்களை கொண்டு வர வேண்டும்".. வெங்கையா நாயுடு வலியுறுத்தல்!

மக்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக திட்டங்களை கொண்டு வர வேண்டும் என குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

வெங்கையா நாயுடு
வெங்கையா நாயுடு (Credits - Venkaiah Naidu X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 5:20 PM IST

வேலூர்:வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் விஐடி பல்கலைக்கழகத்தில் 40 ஆம் ஆண்டு மாணிக்க விழாவையொட்டி, இன்று ராஜம்மாள் கோவிந்தசாமி டவரை (ஊழியர் குடியிருப்பு மற்றும் மாணவிகள் விடுதி) முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் வெங்கையா நாயுடு பேசியதாவது, "கல்வியின் துணைகொண்டு நம் நாட்டை வலுப்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும். விண்வெளி துறையில் பெரும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைக்கப்பட்டு விண்வெளியில் பல சாதனைகளை புரிந்து வருகிறோம்.

ஆனால் இன்னும் 18% மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் படிப்பறிவு இல்லாமல் வாழ்கின்றனர். இதை மனதில் வைத்து, நாம் அவற்றினை ஒழிக்க பாடுபட வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற இடைவெளியைக் குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும்.
நகர்ப்புறத்தில், எல்லாம் கிடைக்கும்.

இதையும் படிங்க:"பயணக் கட்டணம், பராமரிப்பு செலவு குறைவு".. மதுரை கோட்டத்தில் மெமு ரயில் சேவையை விரிவுப்படுத்த கோரிக்கை!

கிராமப்புறங்களில், இந்த விஷயங்கள் சில கிடைக்கவில்லை. எனவே கிராமப்புற மக்களின் அந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்க வேண்டும். மக்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். மக்களுக்கு தேவைப்படுவது இலவசங்கள் அல்ல இலவச கல்வி தேவை, ஏழை மக்களுக்கு இலவச சுகாதாரம் தேவை" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்," புதிய சுகாதாரம் மற்றும் கல்வி இருந்தால் அனைத்து பொருட்களையும் தாங்களே பெறுவார்கள். கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் விவசாயம் நமது அடிப்படை கலாச்சாரம்.

இன்றும் 56% மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். நாம் அரசாங்கத்தை மட்டும் நம்பி இருக்கக் கூடாது. அனைத்தையும் அரசே செய்துவிடும் என்ற தவறான எண்ணம் நம் மக்களிடையே உள்ளது. அனைத்தையும் அரசால் மட்டும் செய்ய முடியாது.தனியார் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்து கல்வி சுகாதாரம் வேளாண்மை ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்து கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை. ஏனெனில் புயல், வெள்ளம், வறட்சி, அவை விவசாயிகளை மிகவும் பாதிக்கின்றன. அதனால்தான் விவசாயத்திற்கும் அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details