தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் போக்குவரத்து போலீசார் திடீர் ரெய்டு.. உரிய ஆவணம் இல்லாத 25 வாகனங்கள் பறிமுதல்! - SEIZED VEHICLES

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திடீரென வேலூர் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதில், உரிய ஆவணங்களின்றி இருந்த ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார்
வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 18, 2024, 6:05 PM IST

வேலூர் :வேலூர் மாவட்டத்தில், உரிய ஆவணங்களின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் திருவள்ளுவர் சிலை பகுதியில், வேலூர் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் வில்சன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

உரிய ஆவணம் இல்லாத (அதாவது FC செய்யப்படாத) ஆட்டோக்கள், சரக்கு வேன்கள், டிராக்டர்கள் என 25-க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையில் போக்குவரத்து விதிமீறல்களை மீறிய இரு சக்கர வாகங்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் அபராத தொகை விதிக்கப்பட்டு ரூ.80,000 வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக சப் இன்ஸ்பெக்டர் ரஜினி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :சிறுவனின் கழுத்தை பதம் பார்த்த மாஞ்சா நூல்.. ஏழு தையல் போட்டு சிகிச்சை.. சென்னையில் பரபரப்பு!

மேலும், ஆட்டோக்களில் அரசு விதிகளை மீறி அதிகளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஏற்றி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து இருக்கையை விட அதிகமான அளவில் ஆட்களை ஏற்றக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்களை தலைக்கவசம் அணியுமாறு போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுபோன்ற திடீர் வாகன சோதனைகள் வேலூர் மாநகரில் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details