வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 2,15,702 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்திய தேர்தல் ஆணைய இணைத்தள விபரம்...
வ.எண் | வேட்பாளர் | கட்சிகள் | பெற்ற வாக்குகள் |
1 | கதிர் ஆனந்த் | தி.மு.க | 5,68,692 |
2 | ஏ.சி.சண்முகம் | பு.நீ.க | 3,529,90 |
3 | பசுபதி | அ.தி.மு.க | 1,17,682 |
4 | மகேஷ் ஆனந்த் | நா.த.க | 53,284 |
- வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 3,98,568 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி 77,066 வாக்குகளும், பாஜக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் 2,35,191 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி மகேஷ் ஆனந்த் 33,276 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகத்தை விட 1,63,377 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 05.05 PM நிலவரம்
- வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 2,47,403 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி 46,444 வாக்குகளும், பாஜக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் 1,56,199 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி மகேஷ் ஆனந்த் 21,396 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகத்தை விட 91,204 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 03.09 PM நிலவரம்
- வேலூர் மக்களவைத் தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 1,22,260 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பசுபதி 27,626 வாக்குகளும், பாஜக கூட்டணியிலுள்ள புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் 83,991 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 12,189 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் பாஜக வேட்பாளர் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகத்தை விட 38,269 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். - 12.40 PM
- வேலூர் மக்களவைத் தொகுதியில் இரண்டாம் சுற்று முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 58,749 வாக்குகளும், அதிமுக 14,990 வாக்குகளும், பாஜக 40,322 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 2,300 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து திமுக கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். - 11.04 AM
இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட 'சிப்பாய் புரட்சி' நடைபெற்ற வேலூர் கோட்டை இன்றளவும் வேலூரின் பெருமையாகத் திகழ்கிறது. கர்நாடகாவில் உருவாகும் பாலாறு தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் அதிக தூரம் கடந்து செல்கிறது. பாலாற்றின் கரையோரம் தான் வேலூர் அமைந்துள்ளது. 2024 தேர்தலில் இங்கு திமுக சார்பில் மீண்டும் கதிர் ஆனந்த் வேட்பாளராகப் போட்டியிட்டார். அதிமுக சார்பில் பசுபதியும், புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மகேஷ் ஆனந்த் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டனர்.