வேலூர்:வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில், ஒரு தரப்பினரால் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி கோயில் இடிக்கப்பட்டு, உள்ளே இருந்த காளியம்மன் சிலை எடுத்துச் செல்லப்பட்டது.
இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்ற அமைதிக்குழு பேச்சு வார்த்தையில் வட்டாட்சியர், அறநிலைய, பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு சிலையை மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து, நேற்று (ஆகஸ்ட் 21) கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலை ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் கே.வி.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் முன்னிலையில் முறையாக காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் அதிகாரிகள் அழைப்பு விடுத்த நிலையில், ஒரு தரப்பினர் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:வங்கதேச கலவரம்: 30 பேர் பலி! வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் என்ன பிரச்சினை?