திருப்பூர் : வெள்ளியம்பதி திமுக ஊராட்சித்தலைவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்தினை முறைகேடு செய்ததாக புகாரளித்திருந்த நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென புகாரளித்த இருவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், வெள்ளியம்பதி ஊராட்சிக்குட்பட்ட ஆதியூர் பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் வெள்ளியம்பதி ஊராட்சியில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு நடைபெறுவதாக வேலைவாய்ப்புத்திட்ட குறைதீர்ப்பு அதிகாரிக்கு புகார் அளித்தனர். வேலைக்கே வராத நபர்களின் பெயரில், திமுக ஊராட்சித்தலைவர் கொண்டசாமி, ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் பணத்தினை முறைகேடு செய்திருப்பதாக புகாரில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மனு (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க :ரயில் ஏறும் அவசரத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை தவற விட்ட நபர்...மீட்டு ஒப்படைத்த கும்பகோணம் ரயில்வே போலீசார்!
அந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணை மேற்கொண்டு, முறைகேடு செய்த பணத்தினை திருப்பி செலுத்த உத்தரவிட்டார். மேலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் முறைகேடாக இணைக்கப்பட்ட 8 பணியாளர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட்டார்.
மனு அளித்த இருவர் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இந்நிலையில், வெள்ளியம்பதி ஊராட்சித்தலைவர் கொண்டசாமி தங்களை மிரட்டுவதாக தியாகராஜன், மணிகண்டன் ஆகிய இருவரும் இணைந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், "100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடு செய்த ஊராட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் வீட்டை, இடிக்கச் சொல்லி மிரட்டுவதால் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,"என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மணிகண்டன் கூறுகையில், " நான் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊராட்சித்தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்ததைக் கண்டறிந்து குறைதீர் அதிகாரியிடம் புகாரளித்தேன். இதனால், நான் வசிக்கும் வீடு ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாகக் கூறி ஊராட்சித்தலைவர் வீட்டை இடிக்கச் சொல்கிறார். இதனால் எனக்கு எனது தாயாருக்கும், பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்