கள்ளக்குறிச்சி:உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் அமைப்பு சார்பில், நேற்று (அக்.2) விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், மது மற்றும் போதைப் பொருள்களைத் தடுக்கும் வகையில் 12 முக்கிய தீர்மானங்களை திருமாவளவன் நிறைவேற்றினார்.
பின்னர் நிகச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது, “மதுவிலக்கு என்பது புத்தர் காலத்திலிருந்தே பேசப்பட்டு வருகிறது. ஞான வம்சத்தில் இருந்து வந்தவன். சாதி மத பெருமைகளை நான் பேசவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு தாக்கத்தை ஏற்படுத்தும். மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் இல்லை.
மது அருந்தக்கூடாது என்று வடலூர் வள்ளலாரும், வைகுண்டரும் வலியுறுத்தினர். இதுவரை நாம் பயன்படுத்தாதவர்களை இப்போது மதுவை வேண்டாமென்று சொன்ன காந்தியையும், ராஜாஜியையும் கௌரவப்படுத்துகிறோம். மதுவுக்கு அடிமையாகியிருந்தால் பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். எந்த மதமும் மதுவை ஆதரிக்கவில்லை.
இந்த மாநாட்டில் புதிதாக காந்தி மற்றும் ராஜாஜியின் கட்அவுட் வைத்திருக்கிறோம். அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. தமிழ்நாடு உட்பட இந்திய அளவில் மது ஒழிப்பு வேண்டும் என்பதே இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள். சாதி, மத வெறியர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என்றார்.
தமிழிசை சொந்தரராஜனுக்கு பதில்: “திருமாவளவன் காந்தியைத் தவிர்த்துவிட்டு காமராஜருக்கு மரியாதை செலுத்த சென்றிருக்கிறார். மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், ஏன் காந்தியைத் தவிர்த்தார் என்று தெரியவில்லை. மது ஒழிப்பை ஆளும் திமுக அரசிடம் வலியுறுத்த முடியவில்லை என்ற குற்ற உணர்வு காரணமா என்பது தெரியவில்லை” என்று தமிழிசை சொந்தரராஜன் விமர்சித்திருந்தார்.
இடையும் படிங்க:திமுக சார்பில் 2 ஆண்கள் மட்டும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டது ஏன்? - ஆர்.எஸ்.பாரதி விளக்கம்!
இதற்கு பதில் அளித்த அவர், “நான் மாலை அணிவிப்பதற்காக காலையில் காந்தி மண்டபம் சென்ற நிலையில், ஆளுநர் வருகையால் என்னை அனுமதிக்கவில்லை. இதனால், நான் காமராஜர் மணிமண்டபம் சென்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினேன். மாநாட்டிற்குச் செல்ல 6 மணி நேரம் ஆகும் என்பதால், அங்கிருந்து புறப்பட்டேன். தமிழிசை சௌந்தரராஜன் மது அருந்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கிறது. அதே போன்றுதான் நானும் இதுவரை ஒரு துளி சொட்டு கூட மது அருந்தியதில்லை. நான் மதுவை பரிசோதனை செய்யும் விஞ்ஞானி பிரிவில் வேலை செய்தவன்” என்றார்.
மதுவிலக்கில் திமுகவுக்கு உடன்பாடு: கிராமப்புறங்களில் பல்வேறு வடிவங்களில் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது. இளம் வயதில் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் மனிதவளம் பாழாகிறது. திமுகவுக்கும் மதுவிலக்கில் கொள்கை அளவில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற உடன்பாடு உள்ளது. தேசிய மதுவிலக்குக் கொள்கை மூலம் நாடு முழுவதும் மது விலக்கு வேண்டும் என மத்திய அரசிடமும், மாநிலத்தில் மது விலக்கு வேண்டும் என தமிழக அரசிடமும் கோரிக்கை வைக்கிறோம்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என்றார் கருணாநிதி. மதுக்கடைகளை மூட முடியாது என மு.க.ஸ்டாலின் கூறவில்லை. நிர்வாக ரீதியில் சிக்கல் இருப்பதாக கூறினார். மதுப்பழக்கத்தால் இந்துக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்துகள் மீது அக்கறை கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தேசிய அளவில் மது ஒழிப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினா மதுக்கடைகளை திறந்தார்? வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அதற்கு முன் சட்டமன்றத்தில் தேசிய மதுவிலக்கை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற நிலையைகூட நான் எடுக்க தயாராக உள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்