தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குறுக்கே வந்த மாடு.. சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம்! - Tirunelveli van accident - TIRUNELVELI VAN ACCIDENT

Tirunelveli van accident: கன்னியாகுமரியை சேர்ந்த 15 பேர் கொண்ட குடும்பத்தினர் சென்னைக்கு வேனில் சென்ற போது சாலையில் மாடு குறுக்கே வந்ததில் வேன் கவிழ்ந்து படுகாயமடைந்தனர்.

Van accident image
வேன் கவிழ்ந்த புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 11:38 AM IST

திருநெல்வேலி: கல்குறிச்சி அடுத்த அம்பலத்து விலை பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் இவரது சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சென்னைக்கு சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து சுற்றுலா வேனில் 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினருடன் கல்குறிச்சியில் இருந்து அலெக்சாண்டர் குடும்பத்தினர், சென்னைக்கு புறப்பட்டனர்.

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் சூழலில், நான்கு வழிச்சாலையில் அலெக்சாண்டர் குடும்பத்தினர் வந்த வாகனம், டக்கரம்மாள்புரம் வந்த போது பாலத்தின் அருகே இருந்த மாடு ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு சென்றுள்ளது. இதனை சட்டென்று பார்த்த ஓட்டுநர் மாட்டின் மீது மோதி விடாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது மழை பெய்திருந்ததால் சாலையில் வழுக்கி வேன் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வேனில் சிக்கி இருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.

இந்த விபத்து தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. வேனில் இருந்த 15 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் மழை பெய்து வரும் சூழலில் சாலைகளில் கேட்பாரற்று திரியும் மாடுகள் வாகனங்கள் வரும்போது குறுக்கே செல்வதால் பல்வேறு பகுதிகளில் விபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதியில் இருந்த லாரி மற்றும் வேன் ஓட்டுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிங்க: ரயிலில் ஒழுகிய மழைநீர்.. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பயணிகள் அவதி! - Splashing Rain Water In Train

ABOUT THE AUTHOR

...view details