தருமபுரி:குறும்பர் லம்பாடி இன மக்களை பழங்குடி பட்டியலில் இணைக்கும் தொடர் முயற்சியின் 17-ஆவது தனிநபர் மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க, தருமபுரி முன்னாள் எம்பி மருத்துவர் செந்தில்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்று, அங்கு பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் அவர்களை சந்தித்து வலியுறுத்திறுத்தியுள்ளார்.
தொடர்ந்து, மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து, தொப்பூர் மலைப்பாதை சீரமைப்பு பணிகள், முன்னதாக கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்ட பாளையம்புதூர் பகுதியில் மேம்பாலம் மற்றும் அகரம் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் அமைப்பது குறித்து அனுப்பப்பட்ட கடிதம் குறித்தும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:"ஓசூர் ஏர்போர்ட்" பிள்ளையார் சுழி போட்ட தமிழ்நாடு அரசு!
இந்நிலையில், கடிதத்தின் தொடர் நடவடிக்கையாக, மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமாருக்கு கடிதம் மூலம் தனது பதிலை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், "தொப்பூர் மலைப்பாதை தேசிய நெடுஞ்சாலை - 44 (NH.44) பாதை சீரமைப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. மேலும், காரிமங்கலம் அகரம் பகுதி மற்றும் பாளையம்புதூர் பகுதியில், சாலையை கடக்கும் பகுதியில் மேம்பாலம் கோரிக்கை குறித்து, அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு Underpass சாலை அமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்," இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:சாலையில் பற்றி எரிந்து சாம்பலான சுற்றுலா வேன்;கதறி அழுத உரிமையாளர் குடும்பத்தினர்! - fire accident