திருப்பத்தூர்:திமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். திருவண்ணாமலை தொகுதிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய இரண்டு தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருப்பத்தூருக்கு வருகை தந்து, ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூட்டத்தில் அவர் பேசுகையில், “குறைந்தது 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாதுரையை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி ஒரு வெற்றிபெறும் பட்சத்தில், மாதத்தில் இருமுறை திருவண்ணாமலைக்கு வந்து, தொகுதி பிரச்சினைகளை கேட்டறிவேன். கரோனோ காலத்தில் இந்தியாவில் அதிக தடுப்பூசி போட்டுக் கொண்ட மாநிலம் என நாம் பெயர் பெற்றோம்.
பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் பேருந்தை ஸ்டாலின் பேருந்து என அழைக்கின்றனர். கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் வழங்குவது போலவே, மாணவர்களுக்கும் வழங்கும் திட்டமும் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும்.