சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி அதன் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் (அக்.14) முதல் கனமழை பெய்ததை அடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.
இதற்கிடையே, நேற்று மாலை முதல் சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களையும் ஊக்கத் தொகையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "சென்னையை சுற்றிலும் நேற்று முன்தினம் இரவும், நேற்று பகலிலும் மிக அதிக கனமழை பெய்தது. தமிழக முதலமைச்சரின் ஆலோசனைக்குப் பிறகு அனைத்து அரசு அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் பணியாற்றினர்.
இதையும் படிங்க:'மழையால் அல்லல் வேண்டாம்'.. ஏர்போர்ட்டுக்குள் செல்லும் மாநகர பேருந்துகள்.. சென்னை பயணிகள் நிம்மதி!