தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை; வைகோவின் மனுவை ஏற்ற டெல்லி தீர்ப்பாயம்! - LTTE ban in India - LTTE BAN IN INDIA

MDMK general Secretary Vaiko on LTTE: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை நீட்டிக்கப்பட்டுள்ள வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க டெல்லி தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டு விசாரணையை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ (Cerdits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 24, 2024, 9:53 PM IST

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து, தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க டெல்லி தீர்ப்பாயத்திடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு அளித்துள்ளார். இது குறித்து மதிமுக கட்சி தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) படி, சட்ட விரோத அமைப்பாக அறிவித்து, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடையை மே 14ஆம் தேதி அன்று மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.

அந்த தடை அறிவிப்பின்படி, முகாந்திரங்களை ஆராய்ந்து முடிவு செய்ய, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப்படி, டெல்லி உயர் நீதிமன்ற நீதியரசர் மன்மீத் பிரிட்டம் சிங் அரோரா (Justice Manmeet Pritam Singh Arora) தலைமையில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட தீர்ப்பாயத்தை அமைத்து, கடந்த ஜூன் 5ஆம் தேதி அன்று ஒன்றிய அரசு மீண்டும் அடுத்த அரசாணை வெளியிட்டது.

அத்தீர்ப்பாயம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக ஏன் அறிவிக்கக்கூடாது, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஜூலை 23ஆம் தேதி மாலை 4 மணிக்கு இத்தீர்ப்பாயத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ சார்பில், இந்தத் தீர்ப்பாயத்தில், விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இந்திய ஒன்றியத்தில் தடை விதிக்க முகாந்திரம் இல்லை. ஆகவே, அந்த அமைப்புக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை இந்திய ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டுமென்றும், வழக்கில் தன்னை ஒரு தரப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் நேற்று (செவ்வாய்க்கிழை) மாலை டெல்லி தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் ஏற்றுக் கொண்டது. ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு விசாரணை ஓத்தி வைக்கப்பட்டது. கடந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் இதே போன்ற மனுவை வைகோ நீதிமன்ற தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்து இருந்தார்" என கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:'பென்ஷன், டிஏ-வை நிறுத்தியது அதிமுக ஆட்சி தான்' - அமைச்சர் சிவசங்கர் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details