தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், தொம்பன் குடிசை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (25) தஞ்சையில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள தனது மனைவி நர்மதாவின் வளைகாப்பு விழாவிற்காக, பட்டுக்கோட்டை பள்ளத்தூர் அருகே உள்ள அழகியநாயகிபுரம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக தனது நண்பர் சாரோன் (20) என்பவருடன் நேற்று மாலை பைக்கில் சென்றுள்ளார்,
பட்டுக்கோட்டை அருகே உள்ள கோட்டாக்குடி செம்மண் குட்டை அருகே பைக் சென்றபோது, பட்டுக்கோட்டை அடுத்த பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன் (27) என்பவர் ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நேர் மோதியது. இதில், அரவிந்தன் மற்றும் சாரோன் ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.