திண்டுக்கல்:கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மிதுன்ராஜ் (42). இவர் திருச்சியில் உள்ள பவர் கிரீட் என்னும் அரசு நிறுவனத்துக்கு சொந்தமான மின்சார வாரியத்திற்கு பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
விடுமுறையை முன்னிட்டு கேரளாவில் இருந்து வந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்த குண்ணிகண்ணன் (64), இவானி (3), இசானி (3), ஷிமானி(6), செபின்(38), அஸ்வத்(28), அருந்ததீ(18), அஞ்சலி (31), அஜித்தா (40), மிதுன்ராஜ் (42), ஷோபனா (51), சோபா (45) ஆகியோருடன் சுற்றுலா செல்ல திட்டமிட்டு, திருச்சியில் இருந்து மதுரை வந்துள்ளனர்.
காரை மிதுன்ராஜ் ஓட்டி வந்துள்ளார். அனைவரும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனத்தை முடித்துவிட்டு, மீண்டும் திருச்சி செல்வதற்காக மதுரையில் இருந்து துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள புதுப்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மைல் கல் மேல் மோதி பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பாலத்தின் தடுப்பில் மோதி கார் உருகுலைந்துள்ளது.