தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் கொடூர கொலை.. தஞ்சையில் இருவருக்கு ஆயுள் தண்டனை! - Thanjavur student Murder case - THANJAVUR STUDENT MURDER CASE

தஞ்சாவூரில் காதல் விவகாரத்தில் பொறியியல் மாணவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறை தண்டனை வழங்கப்பட்ட வெடி கோபி, பிரசாந்த்
சிறை தண்டனை வழங்கப்பட்ட வெடி கோபி, பிரசாந்த் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2024, 11:30 AM IST

தஞ்சாவூர்: தஞ்சாவூர் விளார் சாலை புதுப்பட்டினம் தில்லை நகரைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மகன் மனோஜ்குமார் (வயது 19), தஞ்சையில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து வந்தார். கடந்த டிசம்பர் 28, 2013 அன்று மனோஜ்குமாரை காணவில்லை, இதையடுத்து அவரது தந்தை சுகுமாறன் தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் செய்தார்.

புகாரின் பேரில் ஆய்வாளர் அப்துல் ரஹீம் மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார், இந்த நிலையில் தஞ்சை அருகே வெட்டிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஒரு பாலம் அருகே மனோஜ்குமார் கடந்த 2013 ஆம் வருடம் டிசம்பர் 30ஆம் தேதி அன்று கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் மனோஜ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. சந்தேகம் மரணம் என்ற அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதையும் படிங்க -இரவில் லிப்ட் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை.. சிக்கிய வாலிபர்கள்.. தஞ்சையில் அதிர்ச்சி!

இந்த வழக்கில், தஞ்சாவூரை சேர்ந்த கோபி என்ற வெடி கோபி (36) பிரசாந்த் (36) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மனோஜ்குமார் ஒரு மாணவியை காதலித்து வந்ததும், அந்த மாணவியை வெடி கோபியும் காதலித்ததும் தெரியவந்தது.

மேலும், இது தொடர்பாக மனோஜ் குமாருக்கும், வெடி கோபிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வெடி கோபி தனது நண்பர் பிரசாந்துடன் சேர்ந்து மனோஜ் குமாரை கடத்திச் சென்று கொலை செய்தது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், ஏட்டு பிரகாஷ் குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் இளஞ்செழியன் ஆஜராகி வாதாடினார். வழக்கை நீதிபதி சத்தியதாரா விசாரித்து வெடி கோபி, பிரசாந்த் ஆகிய இரண்டு பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details