தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட சிவராயர் தோட்டம் பகுதியில் உள்ள பட்டு நூல்கார தெருவில், தஞ்சாவூர் தொடக்கப் பட்டு கூட்டுறவு சொசைட்டி உள்ளது. இதில், பிரகதீஸ்வரி (62) என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 8.5 சவரன் தங்க நகையை கத்தியை காட்டி மிரட்டி பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக அவர் தஞ்சை நகர கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பெயரில், உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் சிசிடிவி கேமரா உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தனர்.