தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடிவேலு பட பாணியில் 'விபத்து வழிப்பறி'.. புது ரூட்டில் கொள்ளையடிக்கும் கும்பல்.. வேலூரில் இருவர் கைது..! - vellore accident robbery - VELLORE ACCIDENT ROBBERY

Two arrested for robbery in Vellore: வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தில் விபத்து ஏற்படுத்துவதை போல காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வழிப்பறி கொள்ளையர்கள் சுரேஷ், பிரசாந்த்
வழிப்பறி கொள்ளையர்கள் சுரேஷ், பிரசாந்த் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 2:57 PM IST

காட்பாடி:வேலூர் மாவட்டம் காட்பாடியில் கமல் வம்சி என்பவர் சித்தூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த சுரேஷ், பிரசாந்த் ,ரோஹித் ஆகியோரது இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த நிலையில் கமல் வம்சி வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு, '' எனது வண்டி சேதமடைந்து செலவு அதிகமாக வைக்கும்.. எனவே பணம் தர வேண்டும்'' என கத்தியை காட்டி மிரட்டி வம்சியின் G Pay-யில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை இவர்களது செல்போனுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், வம்சியிடம் இருந்த அரை சவரன் மோதிரம், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பெற்று கொண்டு சென்றுள்ளனர். இதனால் வேதனை அடைந்த கமல் வம்சி, தன்னிடம் வழிப்பறி செய்தவர்களை குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மிரட்டி பணம் பெற்றதாக சுரேஷ், பிரசாந்த் இரண்டு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ரோகித்திடம் அரை சவரன் மோதிரம் மற்றும் வாட்ச் இருப்பதாக தெரிவித்த நிலையில் தலைமறைவாக உள்ள ரோகித்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இரு சக்கர வாகனத்தை இடிப்பது போல் வழிப்பறிவு செய்தது காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கூட்டாளியை கொன்று எரித்த தொழிலாளி.. 5 ஆண்டுகள் கழித்து சிக்கியது எப்படி..?

ABOUT THE AUTHOR

...view details