தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொட்டு பார்த்தா தங்கம்.. வாங்கி பார்த்தா தகரம்... சென்னையில் ஊடுருவிய மாண்டியா கும்பல்! - Mandya gang gold scam - MANDYA GANG GOLD SCAM

Mandya gang gold scam in chennai: சென்னையில் போலி தங்க நகைகளை விற்று மோசடியில் ஈடுபட்ட மாண்டியா கும்பலைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதான பபுலா ரத்தோட், ராகுல்
கைதான பபுலா ரத்தோட், ராகுல் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 3:50 PM IST

சென்னை:சென்னை மேற்கு மாம்பலம் தனபால் தெருவில் குமாரசாமி (59) என்பவர் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 14ம் தேதி இவர் கடைக்கு நபர் ஒருவர் வந்து பொருட்களை வாங்கி உள்ளார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து சில்லறை எடுப்பது போல் ஒரு சில வெள்ளி நாணயங்களை குமாரசாமியிடம் காண்பித்துள்ளார். அது குறித்து கேட்ட போது தனது பெயர் கிஷோர் எனவும் மைசூர் பேலஸ் அருகே கூலி வேலை செய்யும் இடத்தில் பள்ளம் தோண்டும் போது சில வெள்ளி நாணயங்கள், தங்க மாலைகள் தனக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நூதன மோசடி: மேலும், தனது பெண்ணின் திருமண தேவைக்காக சிறிது நகைகளை விற்பனை செய்ய உள்ளதாகவும் தேவையென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறி தனது மொபைல் எண்ணை கொடுத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் அடுத்த நாள் மீண்டும் கடைக்கு வந்த கிஷோர் தன்னிடம் இருந்த இரண்டு தங்க மாலையில் இருந்து ஒரு குண்டு மணியை கொடுத்து நீங்கள் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

அதைப் பெற்ற குமாரசாமி அருகில் உள்ள நகைக்கடைக்கு சென்று பரிசோதித்து பார்த்த போது, அது உண்மையான நகை என்பது தெரிய வந்தது. இதையடுத்து நம்பிக்கை ஏற்பட்டதால் கிஷோரிடமிருந்து மேலும் நகைகளை வாங்க குமாரசாமி முடிவு செய்துள்ளார். அதன் பின்னர் உறவின் இடம் கடனாக 5 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு தங்க மாலையை வாங்க அவர் முடிவு செய்தார்.

அதன் பின்னர் கிஷோரை தொடர்பு கொண்ட போது குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து தங்க மாலையை வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து குமாரசாமி அவரது மனைவி என குடும்பத்துடன் குரோம்பேட்டை ரயில் நிலையத்திற்கு சென்று கிஷோரிடம் பணத்தை கொடுத்து தங்கச் மாலையை வாங்கிச் சென்றுள்ளனர். இந்நிலையில், போலி நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக தாம்பரம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பான செய்திகள் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த குமாரசாமி அருகில் உள்ள நகைக் கடைக்கு சென்று அந்த தங்க மாலையை பரிசோதித்த போது அவை போலி என்பது தெரிய வந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குமாரசாமி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தாம்பரம் துணை ஆணையர் பவன் குமார் தலைமையில் இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர்.

விசாரணையில், இந்த நூதன கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது மாண்டியாவை சேர்ந்த கும்பல்தான் என்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. மேலும் மல்லிகை கடை உரிமையாளரிடம் அந்த கும்பல் கொடுத்த தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் ட்ராக்கிங் செய்தபோது செங்கல்பட்டு மாவட்டம் ஆப்பூர் பகுதியில் இருப்பதாக காண்பித்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் ஆப்பூர் பகுதிக்கு சென்று பார்த்த போது அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது தெரிய வந்தது.

இந்த நிலையில், நேற்று அந்த கும்பலின் செல்போன் சிக்னல் பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் காட்டியுள்ளது. இதையடுத்து விரைந்து சென்ற தனிப்படை போலீசார் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை கைது செய்தனர். இதையடுத்து இருவரையும் குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது கர்நாடகா மாநிலம் மாண்டியவை சேர்ந்த பபுலா ரத்தோட் (36), ராகுல் (23) எனவும், மளிகை கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பேசி போலி தங்க நகையை விற்பனை செய்த கிஷோர் என்பவர் தலைமறைவாகி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

மேலும், இந்த கும்பலின் தலைவன் தலைமறைவாக உள்ள கிஷோர் தான் என்பதும் தெரிய வந்தது. மேலும், இந்த நூதன மோசடியில் ஈடுபடும் மாண்டியாவை சேர்ந்த கும்பல் அவர்கள் வீட்டில் கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்கள் மற்றும் பண்டிகை என்றால் பத்து பத்து நபர்கள் குழுக்களாக பிரிந்து அதற்கு ஒருவர் தலைமை தாங்கி அவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஊடுருவி புதையலில் கிடைத்த தங்க நகை இருப்பதாகவும், குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும் கூறி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் அம்பலமானது.

இதேபோல் வேறு எங்காவது மோசடியில் ஈடுபட்டார்களா என விசாரித்தபோது பெருங்களத்தூர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தங்க நகைகளை காண்பித்து குறைந்த விலையில் விற்பனை செய்ய இருப்பதாகவும், இரண்டு நாட்களில் வந்து நகை கொடுத்து விட்டு பணம் பெற்றுக் கொள்ள இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே தாம்பரம் பகுதியில் வெங்காய வியாபாரி, மற்றும் சென்னை தி,நகர் பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி பெண் ஆகியோரை நூதன முறையில் ஏமாற்றிய மாண்டியா கும்பலை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:வடிவேலு பட பாணியில் 'விபத்து வழிப்பறி'.. புது ரூட்டில் கொள்ளையடிக்கும் கும்பல்.. வேலூரில் இருவர் கைது..!

ABOUT THE AUTHOR

...view details