தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம்..மின் ஊழியர்கள் இருவர் கைது!

சேலத்தில், வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஊழியர்கள்
கைது செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 9 hours ago

சேலம்:சேலம் புது ரோடு அடுத்த மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவர் புதிய மீட்டர் அமைப்பதற்கு அணுகியுள்ளார். அதற்கு போர்மேன் ராதாகிருஷ்ணன் 1000 ரூபாயும், வணிக ஆய்வாளர் மணி என்பவர் 3000 ரூபாயும் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மணிவண்ணன் கொடுத்த தகவல் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான காவலர்கள் இன்று காலை மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் சாதாரண உடையில் சென்றனர்.

இதையும் படிங்க:வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்: டிஜிபி, உள்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்த தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு அனுமதி!

அதன் பின்னர் மணிவண்ணனிடமிருந்து வணிக ஆய்வாளர் மணி மற்றும் போர்மேன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இருவரும் பணம் பெரும்பொழுது கையும் காலமாக சிக்கினர். இதனைத் தொடர்ந்து 2 மின் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில், வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதற்காக 4000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இரண்டு மின்சார வாரிய அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details