தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செஞ்சி அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலி..!

Gingee accident: செஞ்சி அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Auto overturns and children die near Senchi
செஞ்சி அருகே விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்து இரு சிறுவர்கள் பலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:04 AM IST

விழுப்புரம்:சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிராஜ் - சத்யா தம்பதியினர். இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில், சிராஜ் தனது ஆட்டோவில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்பது பேருடன் சேர்ந்து திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்திற்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், கிரிவலத்தை முடித்து விட்டு விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்துள்ள கொணலூர் ஊராட்சி புலிவந்தி கிராமத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர், நேற்று(பிப்.23) நள்ளிரவில் விழுப்புரம் கப்பைக் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது ஆட்டோ எதிர்பாராத விதமாக நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த விவசாய கிணற்றில் கவிழ்ந்தது. இதில், அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் நீரில் தத்தளித்து கிணற்றிலிருந்து வெளியேறினர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநரின் மகன்களான பிரகதீஸ்வரன், ஹரி பிரசாந்த் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் கிணற்றிற்குள் இறங்கி சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு, இரண்டு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் ஆட்டோ கிணற்றில் கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 6 கோயில்களில் ரோப்கார் வசதி" - அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல்

ABOUT THE AUTHOR

...view details