அரியலூர்: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகனின் மகன் அபிமணி (22) என்பவர் 12 வயது பள்ளி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தான் படித்த தனியார்ப் பள்ளியில் பணிபுரிந்து வரும் உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ்(52) என்பவரிடம் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்போது, உடற்கல்வி ஆசிரியர் இதனை விசாரிப்பது போல தன்னுடைய வீட்டிற்குச் சிறுமியை வரவழைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சோர்வாகக் காணப்பட்ட சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார். உடனடியாக பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர்.