சென்னை: இந்திய விமானப்படை நிறுவப்பட்ட தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் இந்திய விமானப்படை தளங்களில் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, நேற்று (அக்.06) சென்னை மெரினாவில் விமான வான் சாகசக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியைக் காண சென்னை மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் மெரினா கடற்கரைக்கு படையெடுத்தனர். ரயில்கள், பேருந்துகள் என அனைத்து விதமான போக்குவரத்து வசதிகள் மூலமாகவும் மக்கள் மெரினா கடற்கரைக்கு வருகை புரிந்தனர். இதனால், சென்னையில் நேற்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விமான சாகசம் முடிந்து ஒரே நேரத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேறியதால் சாலைகளில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால் பொதுமக்கள் பலர் நடந்தே செல்ல சென்றனர். மேலும் கடும் வெயில் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.