மதுரை: மதுரை கோச்சடையில் உள்ள தனியார் விடுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சட்டபேரவைத் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வரும்போது தான் தெரியவரும். இம்முறையால் மத்திய அரசோ, மாநில அரசோ கவிழும் வாய்ப்புள்ளது.
மத்திய அரசு தமிழக அரசை மாற்றாந்தாய் மனப்பக்குவத்துடன் நடத்தவில்லை. புயல், வெள்ள பாதிப்பின் போது மத்தியக்குழு ஆய்வுக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் நிதி தமிழகத்திற்கு வந்தது.
மத்திய அரசு அதிமுகவை அழிக்க வேண்டும் என நினைக்கவில்லை, தமிழ்நாட்டில் அதிமுக பலமாக இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒன்றுபட்ட அதிமுகவாக செயல்பட வேண்டும் என்பதே பாஜகவின் எண்ணம்.
எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவுக்குள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதிமுக உறுப்பினர்களிடம் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாட்டால் 2026-க்கு பிறகு அதிமுக இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 2026-ல் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையாக கூறுவது போல தெரியவில்லை, மூடநம்பிக்கையுடன் பேசுவது போல தெரிகிறது.
இதையும் படிங்க:போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: இபிஎஸ் மீது திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்!