தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் தவறவிட்ட வைரத்தோடு.. உரிய பயணியிடம் ஒப்படைத்த டிடிஆர்.. குவியும் பாராட்டுகள்! - Tambaram to sengottai train - TAMBARAM TO SENGOTTAI TRAIN

Train TTR: தாம்பரம் - செங்கோட்டை ரயிலில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் வைரத்தோடை தவறவிட்ட நிலையில், டிக்கெட் பரிசோதகரால் மீட்கப்பட்டு அப்பயணியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ரயிலின் புகைப்படம்
ரயிலின் புகைப்படம் (Credits: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 24, 2024, 10:35 PM IST

மதுரை: செங்கோட்டை வந்து சேரும் மும்முறை சேவை ரயில், தாம்பரத்தில் இருந்து வியாழக்கிழமை (மே 23) இரவு 9 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலில் மதுரை கோட்டம், செங்கோட்டை பிரிவைச் சேர்ந்த பயணச்சீட்டு பரிசோதகர் டி.கார்த்திகேயன் பணியாற்றி வந்துள்ளார்.

டிக்கெட் பரிசோதகர் டி. கார்த்திகேயன் (Credits: ETV Bharat Tamilnadu)

இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 10.45 மணிக்கு செங்கோட்டை வந்து சேர்ந்தது. இந்த நிலையில், ரயிலில் பயணி தவற விட்டுச் சென்ற வைரத்தோடு ஒன்றை பயணச்சீட்டு பரிசோதகர் கண்டெடுத்துள்ளார். மேலும், இதனை செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பித்து தவறவிட்ட பயணியிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த நேர்மையான செயலைச் செய்த பயணச்சீட்டு பரிசோதகர் டி.கார்த்திகேயனை ரயில்வே அதிகாரிகள் மற்றும் பயணிகள் சங்கத்தினர் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆஃப் பாயில் சாப்பிட்டால் ஆபத்து! பரவும் பறவைக் காய்ச்சலால் எச்சரிக்கை - Bird Flu Health Advisory

ABOUT THE AUTHOR

...view details