தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் திருச்சி ரவுடி என்கவுண்டர்! - Pudukkottai Encounter - PUDUKKOTTAI ENCOUNTER

Pudukkottai Encounter: புதுக்கோட்டையில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரைச்சாமி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

Police
சம்பவ இடத்தில் போலீசார் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 11, 2024, 6:37 PM IST

Updated : Jul 11, 2024, 8:58 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருவரங்குளம் வனப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் சுற்றித் திரிவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைச்சாமி என்பவர் கூட்டாளிகளுடன் வனப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்ற போது அவர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு கத்தியால் ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை வெட்டியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் அந்த இடத்திலே பிரபல ரவுடி துரை உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, திருச்சி சரக டிஐஜி மனோகரன் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தீதா பாண்டே உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த ரவுடி துரையின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Last Updated : Jul 11, 2024, 8:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details