தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திருச்சி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்"- திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா பேச்சு - TRICHY AIADMK CANDIDATE KARUPPAIAH

Trichy AIADMK candidate: திருச்சி தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவேன் என வேட்பு மனு தாக்கல் செய்த பின் திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையா பேட்டி

Trichy aiadmk candidate
Trichy aiadmk candidate

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 25, 2024, 4:35 PM IST

Trichy aiadmk candidate

திருச்சி:தமிழகத்தில்நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், இன்று (மார்ச் 25) திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, முன்னாள் கொறடா மனோகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.குமார், திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன், உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வேட்பாளர் கருப்பையா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ அதிமுக மூத்த தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆசீர்வாதத்துடன் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பாக ப.குமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் எந்த வளர்ச்சி திட்டத்தையும் திருச்சியில் செயல்படுத்தவில்லை. எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால், திருச்சி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பேன்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, மேம்பாலம் போக்குவரத்து மேம்படுத்தப்படவில்லை, இரு வழிச் சாலைகள், நான்கு வழிச் சாலைகள் திட்டத்தில் இந்தியாவிலேயே திருச்சி தொகுதி மிகவும் பின் தங்கி உள்ளது.

நான் திருச்சி தொகுதிக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன். குறிப்பாக, டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவேரி-வைகையை இணைக்கும் குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

திருச்சி தொகுதி மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலித்து மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்துவேன்” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “திருச்சியின் முக்கியத்துவம் தெரிந்து எடப்பாடி பழனிசாமி பரப்புரையைத் தொடங்கியுள்ளார். இன்னும், சில நாட்களில் எப்படித் தேர்தல் களம் சூடி பிடிக்கும் என்று பாருங்கள்” என்றார்.

இதையும் படிங்க:"மாநில அரசின் அலட்சியத்தால் தான் கோவை மக்கள் அவதி" - அண்ணாமலை குற்றச்சாட்டு! - Annamalai Meet Perur Aadheenam

ABOUT THE AUTHOR

...view details