தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காரைக்குடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்; ரயில் சேவையில் முக்கிய மாற்றம்! - Karaikudi Railway station - KARAIKUDI RAILWAY STATION

Karaikudi Railway Station: மின்மயப் பராமரிப்பு ரயிலை நிறுத்தி வைப்பதற்காக காரைக்குடி ரயில் நிலையத்தில் தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில் கோப்புப்படம்
ரயில் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 10:00 PM IST

மதுரை: மின்மயப் பராமரிப்பு ரயிலை நிறுத்தி வைப்பதற்காக, காரைக்குடி ரயில் நிலையத்தில் தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, காரைக்குடி ரயில் நிலையத்தில் மின் தடங்களை பராமரிப்பதற்காக உள்ள சிறப்பு ரயிலை நிறுத்தும் வசதி ஞாயிற்றுக்கிழமை (மே 19) அன்று ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்காக தனி ரயில் பாதை அமைத்து, தற்போது உள்ள ரயில் பாதைகளோடு இணைக்கும் வேலை நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, ராமேஸ்வரம் - புவனேஸ்வர் ரயில் (20895) ஞாயிற்றுக்கிழமை அன்று காரைக்குடி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக மானாமதுரை, மதுரை, திண்டுக்கல் வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.

மேலும், அன்றைய தினம் திருவாரூர் - காரைக்குடி ரயில் (06197) பெரிய கோட்டை வரையிலும், திருச்சி - காரைக்குடி - திருச்சி ரயில்கள் (06829/06126) செட்டிநாடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அன்றைய தினம் காரைக்குடி - திருச்சி - காரைக்குடி ரயில்கள் (06830/06125) மற்றும் திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி ரயில்கள் (16849/16850) முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதேநேரம், அன்றைய தினம் காரைக்குடி - திருவாரூர் ரயில் (06198) காரைக்குடியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பரலாக இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:புதிய பாம்பன் பாலம் எப்போது தயாராகும்? - தெற்கு ரயில்வே கூறுவது என்ன? - New Pamban Bridge Construction

ABOUT THE AUTHOR

...view details