வேலூர்:திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.
அந்த வகையில், வேலூா் திமுக வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்த், அரக்கோணம் திமுக வேட்பாளா் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து வேலூரில் நாளை (செவ்வாய்கிழமை) மாலை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதன்படி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் வேலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் மற்றும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் பறக்க தடை:இந்நிலையில், வேலூர் மாவட்டத்திற்கு நாளை (ஏப்.02) மு.க.ஸ்டாலின் வருகை தர இருப்பதால் வேலூர் மாநகரட்சி பகுதிகள் முழுவதையும் (No Flying Zone) "ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவித்துள்ளார். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் போக்குவரத்து மாற்றம்: மேலும், முதலமைச்சர் வருகையையொட்டி, பாதுகாப்பு பணியில் வாகன நெரிசல்களை தவிர்க்க வேலூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் கீழ்கானும் வழியாக திருப்பிவிடப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அமலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1.குடியாத்தம் காட்பாடி (வழியாக) சென்னை வரை குடியாத்தம் வடுகன்தாங்கல் செதுவாலை நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம்.