தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குன்னூர் கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 20 பேர்! - Tourist van accident in Coonoor - TOURIST VAN ACCIDENT IN COONOOR

Tourist Van Accident In Coonoor: குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வேன் ஓட்டுநர் உட்பட 20 நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 28, 2024, 9:05 PM IST

Updated : Jul 28, 2024, 9:23 PM IST

நீலகிரி: நெய்வேலி குத்தாண்டி குப்பம் பகுதியைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள், 11 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் உதகைக்கு வேன் மூலம் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா வேனை வீர மார்த்தாண்டன் (40) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

உதகையைச் சுற்றி பார்த்துவிட்டு ஊர் திரும்பும் வழியில், கோவை ஈஷா யோகா மையத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை ஆறாவது கொண்டை ஊசி வளைவு கே.என்.ஆர் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.

இந்நிலையில், வேனில் பயணித்த ஓட்டுநர் உள்பட 20 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் முகத்தில் சிறு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குழந்தையை குன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் போக்குவரத்து ஆய்வாளர் முத்து கணேஷ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், கிரேன் மூலம் சாலையில் விழுந்து கிடந்த வேனை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:2026 தேர்தலில் நான்கு முனை போட்டியை எதிர்பார்க்கிறோம்.. அண்ணாமலை பேச்சு! - annamalai criticize Mk Stalin

Last Updated : Jul 28, 2024, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details