தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 6:05 PM IST

ETV Bharat / state

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு... தக்காளி கிலோ எவ்வளவு தெரியுமா? - Tomato price hike in Koyambedu

Koyambedu Market: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்கப்படுகிறது.

தக்காளி புகைப்படம்
தக்காளி புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை, கோயம்பேடு சந்தைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து நாள்தோறும் பலவகையான காய்கறிகள் வருகின்றன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக காய்கறிகள் விலை உயர்ந்துகொண்டே இருந்தாலும், தக்காளி விலை உயராமல் இருந்தது. இந்நிலையில் தக்காளி விலை தற்போது உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு தக்காளி வியாபாரி தியாகராஜன் கூறுகையில், "கடந்த 2 தினங்களாக தக்காளி வரத்து குறைவானதால், தக்காளி விலை நேற்றைய தினம் கிலோவிற்கு ரூ.60க்கும், இன்றைய தினம் சற்று குறைந்து கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

தினமும் 800 டன் வரவேண்டிய தக்காளி வரத்து, 500 டன் ஆக குறைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக 35 ரூபாய் விற்ற தக்காளி விலை கிலோ ரூ.50 ஆக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். அதேபோல் கோயம்பேடு சந்தைக்கு 450 - 500 காய்கறி வாகனம் வரவேண்டிய நிலையில், தற்போது 350 வாகனங்கள் தான் வருகிறது" என்றும் தியாகராஜன் தெரிவித்தார்.

காய்கறி வியாபாரி பாலாஜி கூறுகையில், "பீன்ஸ் வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் பீன்ஸ் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. பீன்ஸ் கிலோ ரூ.50க்கு விற்கப்பட்டுவந்த நிலையில் தற்போது ரூ.180க்கும், கேரட் கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.60க்கு விற்கப்படுகிறது.

வெண்டைக்காய் சௌசௌ, முள்ளங்கி கிலோ ரூ.25க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. பாகற்காய், பீர்க்கங்காய் கிலோ ரூ.30க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.60க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய், கத்திரிக்காய் கிலோ ரூ.15க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது.

மழைக்காலம் துவங்கும் வரையிலும் காய்கறிகள் விலை உயர்ந்தே இருக்கும். வெயிலின் தாக்கத்தால் வரத்து குறைந்து வருவதால் காய்கறி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:விருந்துல ஏன் முட்டை வைக்கல? - தகராறில் அண்ணன் மகனுக்கு வெட்டு... தூத்துக்குடியில் நடந்த பயங்கரம்! - Poopunitha Neerattu Vizha

ABOUT THE AUTHOR

...view details