மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே இன்று முதல் புதிய சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிதாக நிறுவப்பட்ட இந்த சுங்கச்சாவடி, கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை 85 இல், மூணாறு மற்றும் தேவிகுளம் ஆகிய இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு இடையே, கேப் ரோடு சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
முன்னதாக, தேசிய நெடுஞ்சாலையின் மூணாறு - போடிமெட்டு பிரிவில் 41.78 கிலோமீட்டர் தூரத்திற்கு 371.83 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்பட்டன. இங்கு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாகனங்களுக்கு விதிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் வணிகம் அல்லாத வாகனங்களைக் கொண்ட குடியிருப்பாளர்கள் 340 ரூபாய் செலுத்தி மாதாந்திர பாஸ் மூலம் பயனடையலாம்.
டோல் கட்டண விவரங்கள்
கார்கள், ஜீப்புகள் மற்றும் பிற சிறிய வாகனங்களுக்கு:
ஒரு முறை பயணம்: 35 ரூபாய்
திரும்பும் பயணம்: 55 ரூபாய்
இருவழிப் பயணங்களுக்கான மாதாந்திர பாஸ்: ரூ.1,225
மினி பேருந்துகள்