தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்!

TN weather report today: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பிப்ரவரி 3ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்!
சென்னை வானிலை ஆய்வு மையம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 4:11 PM IST

சென்னை:தென்னிந்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நாளை (பிப்.03) வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இன்று (பிப்.2) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து, நாளை (பிப்.03) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. இதைத் தொடர்ந்து, 8-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கழுகுமலை, கயத்தார் பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும், கோவில்பட்டியில் 2 செ.மீ மழையும், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி AWS, திருச்செந்தூர் AWS பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

அதேபோல, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 5 செ.மீ மழையும், ராஜபாளையத்தில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெருஞ்சாணி அணையில் 3 செ.மீ மழையும், புத்தன் அணை பகுதியில் 2 செ.மீ மழையும், சுருளக்கோடு, திற்பரப்பு, பழைய தாலுகா அலுவலகம் பாலமோர் பகுதியில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம், குண்டேரிப்பள்ளம் பகுதியில் 5 செ.மீ மழையும், பவானிசாகரில் 3 செ.மீ மழையும், சத்தியமங்கலத்தில் தலா 2 செ.மீ மழையும், திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டையில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க:பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்தார்!

ABOUT THE AUTHOR

...view details