தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் ஓய்ந்தும் ஓயாத கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - TODAY SCHOOL LEAVE

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2024, 7:21 AM IST

சென்னை:ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பின்னும், அதன் தாக்கம் குறையாமல் இன்னும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறிய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரைக் கொட்டித் தீர்த்தது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதிகன மழை பெய்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

தற்போது புயல் கரையைக் கடந்தாலும் கூட தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மழை பெய்த வண்ணம் உள்ளது. அதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

  • திருவண்ணாமலை
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கிருஷ்ணகிரி
  • கள்ளக்குறிச்சி மற்றும்
  • புதுச்சேரி பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 3 தாலுகாக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை:

  • சேலம்
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • தருமபுரி
  • ராணிப்பேட்டை
  • அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு.
  • நாமக்கல் (கொல்லிமலை வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை)

மழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளிகளில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பள்ளி நடத்துவதா அல்லது விடுமுறை அளிப்பதா என்பதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் (அ) பள்ளி முதல்வர்களே அறிவிக்க உத்தரவு.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மெரினா கடற்கரை மணற்பரப்பில் குளம்போல் தேங்கிய மழைநீர்: ஆனந்தமாய் குளியல் போட்டு மகிழும் சிறுவர்கள்!

ABOUT THE AUTHOR

...view details