சென்னை:கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தினந்தோறும் ஏற்றம் காணும் தங்கத்தின் விலை, அவ்வப்போது சிறிதளவில் விலைக் குறைவும் இருந்து வருகிறது. தங்கம் என்பது ஆடம்பர ஆபரணமாக மட்டுமில்லாமல், இந்திய மக்களின் சேமிப்பின் முக்கிய பொருளாகவும் அமைகிறது.
ஆனால், தற்போதைய தங்கத்தின் விலை ஏற்றத்தால் சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறி வருகிறது. கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான உயர்வை கண்டுள்ள தங்கத்தின் விலையால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பொதுவாக தங்கத்தின் விலையானது, சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில் கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்தே நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும், சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம், பொருளாதார மந்தம் என பல்வேறு காரணங்களை முன் வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றமும், இறக்கமும் காணப்பட்டு வருகிறது. இதுமட்டும் இன்றி, உலக நாடுகளிடையே உருவாகி வரும் போரின் எதிரொலி மற்றும் பொருளாதார மந்தம் காரணாமாக கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் ஏற்றம் கண்டு வந்தது.
இதற்கு இடையில், அவ்வபோது சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் குறைவும் ஏற்பட்டது. இந்த நிலையில், அட்சய திருதியை முன்னிட்டு கடந்த வாரம் ஒரே நாளில் ரூ.1,240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனையானது. அதனைத் தொடர்ந்து சிறிது குறைந்தாலும், கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் ஏற்றத்தை கண்டு வருகிறது.
அந்த வகையில், இன்று (மே.16) தங்கம் விலை, சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. அதன் அடிப்படையில், நேற்றைய (மே.15) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.53,800-க்கு விற்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், இன்று (மே.16) காலை தங்கம் ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.54,360-க்கு விற்பனையாகிறது.
மேலும், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795-க்கும், ஒரு சவரன் ரூ.54,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டும் அல்லாது, வெள்ளியின் விலை கிராமிற்கு 1 ரூபாய் 50 பைசாக்கள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.92.50-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.92,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையில் கோவில் அர்ச்சகர் செய்த காரியத்தை பாருங்க மக்களே!