தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் நான்கு விமானங்கள் ரத்து.. பயணிகள் கடும் அவதி!

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூரு உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானம் கோப்புப்படம்
விமானம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 11:03 PM IST

சென்னை: சென்னையில் இருந்து இன்று மாலை 6.10 மணிக்கு கவுகாத்தி செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய விமானம் ஆகிய 2 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே போல் மாலை 5.35 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆகிய 2 வருகை விமானங்கள் மொத்தம் 4 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

"நிர்வாக காரணங்களால் இந்த 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன" என்று விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனர் . ஆனால் " நாங்கள் பல நாட்களுக்கு முன்னதாக ஏற்கனவே பயணத் திட்டத்தை வகுத்து டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து இருக்கிறோம்.

இதையும் படிங்க:தஞ்சையில் இருந்து மலேசியா முருகன் கோயிலுக்கு பறக்கவிருக்கும் 70 அடி உயர வேல்..!

திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக" பயணிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பயணிகள் தங்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதைப்போல் நிர்வாக காரணம் என்று ஒட்டுமொத்தமாக அறிவித்தாலும், உண்மையான காரணம், விமானங்களை இயக்க போதிய விமானிகள் இல்லாதது தான், விமானங்கள் ரத்துக்கு காரணம் எனவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் இனி வரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details